சித்திரையில் பிறந்ததால் தண்ணீரில் மூழ்கடித்து பேரனை கொன்றேன் கொன்றேன்- கைதான தாத்தா பரபரப்பு வாக்குமூலம்…!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா. இவருக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்துள்ளது. பாலமுருகன் தற்போது திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாய்-தந்தை வீட்டில் வசித்து வந்த சங்கீதாவின் குழந்தை
பேரல் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கீதா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி, பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தாத்தா வீரமுத்து தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாரிடம் வீரமுத்து கூறுகையில், சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் தாத்தா உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையின் காரணமாக குழந்தையை பேரல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்தனர்.
Comments are closed.