ஸ்ரீரங்கத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா…
அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு...
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் தமிழக அரசு மூலதன மானிய நிதி 2023-24ம் ஆண்டு கேப்பிட்டல் கிரவுண்ட் பண்ட் திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே இன்று(15-12-2023) நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையம் தரைதளத்தில் 8 பேருந்துகள் நிறுத்தவும், 22 கடைகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல் தளத்தில் 260 நபர்கள் அமரும் வகையில் சிறிய திருமண மண்டபமும் கட்டப்பட உள்ளது. விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், பகுதி செயலாளர்கள் ராம்குமார், நாகராஜன், காஜாமலை விஜி, மோகன்தாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், கவுன்சிலர்கள் செல்விமணி, ராதா, அப்பீஸ் முத்துக்குமார், ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.