Rock Fort Times
Online News

பிளஸ்-2 மாணவர்களுக்கு குட் நியூஸ்: வருகிற ஆகஸ்ட் 1 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்-அரசு தேர்வுகள் இயக்ககம்…!

இந்த ஆண்டு (2024 மார்ச்) 12 ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.  பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும்,  விவரங்களை www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்