Rock Fort Times
Online News

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை: வட மாநில தொழிலாளர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெயசிங் (வயது 30), முகேஷ்சிங் (28), மணீஷ் திர்கி (27) மற்றும் முனிங்சிங் ஆகிய 4 பேரும் மங்களூரு ஊரக காவல் எல்லைக்குட்பட்ட திருவாயிலு கிராமத்தில் உள்ள  ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். சிறுமியின் பெற்றோரும் அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்த சூழலில் வீட்டின் அருகே சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர்கள் சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தனர். அதனை சிறுமி வாங்கினாள். பின்னர் அவர்கள் அனைவரும், நாங்கள் உனது தந்தையின் நண்பர்கள் தான். அவர் உன்னை அழைத்து வர கூறினார் என சிறுமியை அவர்கள் காரில் ஏற்றி சென்றனர். காரை அங்குள்ள பாழடைந்த கட்டிடம் அருகே நிறுத்தினர். பின்னர் சிறுமியை அவர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், மூச்சுத்திணறி சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இ்ந்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 வாலிபர்களை கைது செய்தனர். முனிங்சிங் மட்டும் தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயின் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள் 120 (பி), 366 (ஏ), 376 டிபி, 377, 302 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயசிங், முகேஷ்சிங், மணீஷ் திர்கி ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். முனிங்சிங் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அரசு வழக்கறிஞர் பத்ரிநாத நயாரி , “நவம்பர் 21, 2021 அன்று, தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொலைதூரப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றனர். மங்களூருவில் உள்ள போக்சோ கோர்ட்டு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிய முதல் வழக்கு இதுவாகும் என்று அவர் கூறினார்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்