‘ஜெம்’ வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். பெருநகர சென்னை காவல்துறையின், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான இக்குழுவில், பெருநகர காவல்துறையின் சட்டம் -ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி ஐபிஎஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி. கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சிறப்பு விசாரணைக் குழுவானது பெருநகர சென்னை காவல் ஆணையரின் மேற்பார்வையில் செயல்படும் என்றும், இதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் தளவாட வசதிகளை பெருநகர காவல் ஆணையர் வழங்குவார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.