போதைப்பொருட்களை விற்றால் பாரபட்சமின்றி குண்டர்சட்டம்! “ஸ்ப்ரிட்டை”தவறாக பயன்படுத்தும் மருத்துவமனைகளுக்கு சீல்! திருச்சி மாவட்ட கலெக்டர் கறார் !
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் : திருநங்கைகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.அவை பரிசீலனை செய்து நிறைவேற்றி தரப்படும் . கள்ளச்சாராயம் தொடர்பாக, திருச்சி மாவட்டத்தில் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம் கூட தவறு நடந்து விடக்கூடாது என, அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். உணவுத்துறை அதிகாரிக்கும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு நாளைக்கு எத்தனை கடைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து தினமும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் பதியப்படும். ஒரு சில தொழிற்சாலைகளில், மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் மெத்தனாலை எவ்வளவு வாங்குகிறார்கள்? எவ்வளவு பயன்படுத்துகிறார்கள்? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கபடுகிறது. மருத்துவ பயன்பாட்டிற்கும் சில ஸ்பிரிட்டுகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு பயன்பாடு என்று தொடர்ந்து கண்காணிப்படும். மருத்துவ பயன்பாட்டிற்கு அல்லாமல் வேறு எதற்காகவது பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பத்தப்பட்ட மருத்துவமனை சீல் வைக்கப்படும் என்றார்.
Comments are closed.