கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், காது கேளாமை, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்தவகையில் இன்று(22-06-2024) காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாணசுந்தரம் மற்றும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments are closed.