Rock Fort Times
Online News

திருச்சியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி- போலீசார் விசாரணை…!

திருச்சி, வயலூர் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (51). இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் தேடி வந்துள்ளார். இந்நிலையில் திருவானைக்காவல், நடு கொண்டயம்பேட்டை, கரிகாலன் தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனலட்சுமியை அணுகி ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு இடத்தை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய தனலட்சுமி அவரிடம் ரூ.40 லட்சம் பணத்தை இடம் வாங்குவதற்காக கொடுத்துள்ளார்.  பணத்தை பெற்றுக் கொண்ட கண்ணதாசன் இடமும் வாங்கித்தராமல், பெற்ற பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்