அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் இன்று(19-12-2024) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதஎன, கே.என்.சேகரன், சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனக்கோடி, பகுதிச் செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார் ,பாபு, மணிவேல், சிவக்குமார், நீலமேகம், பொதுக்குழு உறுப்பினர்கள் சேங்கூர் தனசேகரன், கவுன்சிலர்கள் கே.கே.கே. கார்த்திக், சாதிக் பாட்ஷா மற்றும் ஏ.பி. ரகுநாதன், கருணாநிதி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் மேலகல்கண்டார் கோட்டை செந்தில், வட்டச் செயலாளர்கள் சங்கர், சுருளிராஜன், சுரேஷ் உள்பட தெற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி கழகச் செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
Comments are closed.