திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா- அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு…!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் 1979-ம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு அது காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும், கட்டிடம் பழுதடைந்த காரணத்தினாலும் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த காவல் நிலையம் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(20-01-2025) நடைபெற்றது. விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அடிக்கல் நாட்டு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டம் – ஒழுங்கு தெற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன், அரசு மருத்துவமனை டீன் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த காவல் நிலையம் 8 அறைகளுடன் 1,520 சதுர அடி பரபப்பளவில் கட்டப்படவுள்ளது.
Comments are closed.