Rock Fort Times
Online News

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் -இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக அதிமுக தலைமை அலுவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கும் மாலைஅணிவித்து அதிமுக கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கடற்கரை காமராஜர் சாலை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்