Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் பலி…!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்  நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த  4 நாட்களுக்கு கள்ளச்சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று (04-06-2024) உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி, மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச் சாராயம் குடித்த 65 பேர்  உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து மேலும் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்