சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவர் உள்பட 9 பேரை தட்டி தூக்கியது தனிப்படை…!
சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி அதிமுக பகுதிச் செயலாளர் சண்முகம் (54) நேற்று(03-07-2024) இரவு தாதகாபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்று நள்ளிரவு, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலையில் தொடர்புடைய, திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் (48), அருண்குமார் (28), முருகன் (23), பாபு (45), சீனிவாசன் (25), பூபதி (25), கருப்பண்ணன் (எ) சந்தோஷ் (31), கவுதமன் (33), நவீன் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையில் தொடர்புடைய சதீஷ் குறித்து சண்முகம் போலீஸில் தகவல் தெரிவித்ததால், அவரை கூலிப்படை மூலம் சதீஷ் கொலை செய்துள்ளதாக சண்முகத்தின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments are closed.