Rock Fort Times
Online News

புயல் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு…!

தமிழகம்- புதுச்சேரி இடையே மையம் கொண்டுள்ள  ஃபெஞ்சல் புயல் இன்று (30-11-2024) சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழை காரணமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய எடிஆர் ரக சிறிய விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. சென்னையில் இருந்து விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை, கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, அந்தமான் உள்ளிட்ட 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும், மிகவும் கவனமாக ஓடுபாதை தெளிவாக இருந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் தரையிறங்க வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து, பின்னர் தரையிறக்கப்படுகிறது.  அந்தவகையில் குவைத் நாட்டில் இருந்து இன்று காலை 6-35 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையம் அருகே வந்தடைந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. தொடர்ந்து ஓடு பாதை சீரானதையடுத்து பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப் பட்டது.புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரையில் எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.போதுமான பயணிகள் இல்லாத காரணத்தினால், சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நண்பகலுக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்குமானால், மேலும் சில விமான சேவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்