தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா(45). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், கனகா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை தூய்மைப் பணிக்காக தூத்துக்குடி சிஜிஇ காலனி பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கனகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த கனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கனகாவை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர் யார்?, எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.