திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் ஏழூர்பட்டி அருகே அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி முன்பு நின்று கொண்டு நாமக்கல்லை நோக்கியும், திருச்சி நோக்கியும் சென்ற வாகனங்களை நிறுத்தி இரவு ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறப்படும் வாலிபர் ஆகியோர் லஞ்சம் கேட்டதுபோல சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல், செல்வம் ஆகிய இரண்டு எஸ்.எஸ்.ஐ-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.