திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சரவணகுமாரை எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி அந்த பெண்ணிடம், சரவணகுமார் தொடர்பு வைத்திருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரர் பாஸ்கரன் (30), தந்தை உபகாரன் (59) இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி, சரவணகுமாரின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயன்றனர். இச்சம்பவம் குறித்து சரவணக்குமாரின் மகன் கர்ணன் கொடுத்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்து கடந்த புதன்கிழமை ( 24.05.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை- மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.