திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். வீட்டு கட்டுமானத்திற்காக தேவையான தண்ணீரை வாடகை டிராக்டர் மூலம் இறக்கியுள்ளார். அப்பொழுது, கணேசனின் 15 வயது மகன் பாண்டியன் டிராக்டரில் தண்ணீர் தீர்ந்து விட்டதா? என்று டிராக்டர் மேல் ஏறி பார்த்துள்ளார். அப்போது தலைக்கு மேலே உயர்அழுத்த மின்சார கம்பி மோதி பாண்டியன் தூக்கி வீசப்பட்டான். அதே நேரத்தில் டிராக்டரில் இருந்த ஓட்டுநர் முருகானந்தம் மீதும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் இருவரையும்
மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஓட்டுநர் முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து சிறுவன் பாண்டியன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம்
குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
1
of 872
Comments are closed.