Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு- ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்…!

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்தவகையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்