Rock Fort Times
Online News

டிசம்பர் மாதத்தில் உயிர் நீத்த பிரபல தலைவர்கள்…

தமிழக அரசியல் தலைவர்களுக்கும், டிசம்பர் மாதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றே சொல்லலாம். அதாவது டிசம்பர் மாதத்தில் தான் பிரபல தலைவர்கள் உயிர் நீத்துள்ளனர். அந்த பட்டியலில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந் தும் இணைந்து விட்டார். அதாவது, “மக்கள் திலகம்” என்று அழைக்கப்படுபவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 24 -12-1987 இல் உயிர் நீத்தார். இதேபோல, அவர் வழி வந்தவரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா 5 -12- 2016 இல் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் 24- 12 -1973 இல் உயிர் இழந்தார். வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக முன்னாள் முதல்- அமைச்சருமான ராஜகோபாலாச்சாரி 25 -12 -1972 இல் உயிர் நீத்தார் . அந்த வரிசையில் தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று (28 -12 -2023) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்