திருச்சியில் பரபரப்பு: போதை மறுவாழ்வு மையத்தின் மாடியில் இருந்து குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை…!
திருச்சி வயலூர் ரோடு இரட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பிள்ளை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 34 ). எம்.எஸ்சி பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரவீன்குமார் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது பெற்றோர் திருச்சி-கரூர் ரோட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பிரவீன் குமாரை சேர்த்துள்ளனர். இந்நிலையில், கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர் போதை மறுவாழ்வு மையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் கால் உடைந்து மண்டை பிளந்தது. உடனே அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை வீரப்பிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.