Rock Fort Times
Online News

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா…!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி ஏரி அமைந்துள்ளது. சுமார் 145 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து திருத்தலையூர் ஏரி வழியாக தண்ணீர் வந்து சேருகிறது. இந்த ஏரியில் இன்று ( 12.08.2023 )  மீன்பிடி திருவிழா நடந்தது. முன்னதாக பொதுமக்கள் பூவாயி தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்தி பின்னர் மீன் பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த ஏரியில் நெய்வேலி கிராமத்தைச் சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்சாகமாக மீன் பிடித்தனர். அதில் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, விரால் உள்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். சிலருக்கு 5, 7, 8 கிலோ அளவுள்ள பெரிய மீன்களும் கிடைத்தன.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்