Rock Fort Times
Online News

தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணாநகர், ஜே ஜே நகர் மற்றும் பாரிமுனையில் உள்ள நாலு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளிகளில் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்துவதற்காகவே விடுக்கப்பட்டது. எனவே பொதுமக்களும் பெற்றோரும் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்