Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு…!

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது.  இதன் ஒரு பகுதியாக இன்று(17-11-2024)  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாயக்கூடம் உட்பட்ட இடங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார் இந்த ஆய்வின்போது திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், சிவக்குமார், மற்றும் பாக முகவர்கள், வட்ட கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்