Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் ஜரூர் : 3073 மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதீப் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2547 வாக்கு சாவடி மையம் உள்ளது. 3053 வாக்குபதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 3307 விவிபேட் உள்ளது மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது.

வாக்கு அலுவலர்களுக்கு வரும் 24- ந் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருச்சியில் நேற்று மாலை வரை 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் முறையான ஆவணங்களை காட்டிய பிறகு ரூ.7 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் தொகை ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி துறையில் தெரிவிக்கப்படும். ஆவணம் சரியாக இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும். இறந்த தலைவர்களின் சிலைகள் மூட வேண்டாம். சிலைகளில் கீழே உள்ள பெயர்களை மூட வேண்டும் என ஆணையம் தெரிவித்து உள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்