திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று ( 04.09.2023 ) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்தநிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் ரெங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 63) என்பவரும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கூட்டம் நடந்த அறைக்குள் அவர் நுழைந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ குழுவினர் சாமிநாதனை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.