Rock Fort Times
Online News

திருச்சியில் 10 வைஸ்ய தம்பதிகளுக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி விழா….!

வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் சார்பில் நடைபெற்றது..

வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் சார்பில், 10 வைஸ்ய தம்பதிகளுக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி விழா, திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வாசவி மஹாலில் இன்று  (4-09-23) நடந்தது. இதில் திருச்சி வாசவி யுனிவர்ஸ் சங்கத்தின் முன்னோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயபுரம் எஸ்.ராஜா- ஆர்.சுமதி, திருச்சி சி.ஜெயபிரகாஷ்-ஜே.மகாலட்சுமி, கோவை ஏ.ராஜரத்தினம்- ஆர், கமலாலட்சுமி, வடக்கு உடையார்பாளையம் எல்.சேகர்- எஸ்.சுப்புலட்சுமி, திருவண்ணாமலை எஸ். பத்மநாபன்- பி.மஞ்சுளா, சேலம் பி.சத்திய நாராயணன்- எஸ்.மகாலட்சுமி, சேலம் சாரங்கபாணி- எஸ்.கலா, புதுச்சேரி எஸ்.வெங்கடேசன்- வீ.சரஸ்வதி, சென்னை எஸ்.சேகர்-எஸ் பத்மா, கோம்பை ஸ்ரீதர்-எஸ்.லக்ஷ்மி ஆகிய 10 தம்பதியினருக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி விழா நடந்தது. அவர்களுக்கு வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ்சின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் சாா்பில் கல்யாண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வி.என். டைமண்ட். KCGF சா்வதேச தலைவா் காயத்ரி , V503 A மாவட்ட ஆளுநா் வி. ராம்குமாா், வாசவி வித்யாலயா பள்ளி தாளாளா் டாக்டா். மாதவ மனோகரன் , KCGF ப்ராஜக்ட் தலைவா் ஏ. பாலாஜி, தலைவா் சி. சுப்ரமணியன், செயலாளா் ஆா்.எம்.கே. ராஜன், பொருளாளா் வி. நிஷாந்த் மற்றும் வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ்ன் அனைத்து உறுப்பினா்கள் சிறப்பாக செய்திருந்தனா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்