திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (11- 06- 2026) பள்ளி முடிந்து மாலை மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளி அருகே சென்ற கார் ஒன்று, அவ்வழியாக நடந்துசென்ற மாணவர்கள்மீது மோதியுள்ளது. இதில் லோகேஷ்(12), ரக்ஷித் (13) உள்பட மூன்று மாணவர்கள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.