கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 7.6 அடி உயர்ந்து, 68.91 அடியாக உயர்ந்தது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்று காலை 53,098 கன அடியாகவும்,, இரவு 69,673 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து இன்று (21-07-2024) காலை 71,777 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.31 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 68.91 அடியாகவும், நீர் இருப்பு 25.67 டிஎம்சியில் இருந்து 31.77 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் நீர்மட்டம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 7.6 அடியாகவும், நீர் இருப்பு 6.1 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.