தீயணைப்பு துறையினரின் சிறப்பான செயல்பாடுகளால் தீ விபத்து கனிசமாக குறைந்துள்ளது…திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் பேட்டி
ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருச்சி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் குமார், உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தஅவர்., தீ விபத்து மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தப்பட்டு வந்தோம். ஆனால் பாம்பு வீட்டிற்கு சென்று விட்டால்கூட அதனைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியிலும் தற்போது ஈடுபடுகிறோம். ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டுகிறோம். தீயணைப்பு துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு தீ விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.