அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி இ.பி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு .மதிவாணன் தலைமையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் மூக்கன், அ.த.த.செங்குட்டுவன், ராஜேஸ்வரன், பகுதிகழக செயலாளர்கள் மருந்து கடை மோகன், ஓ. நீலமேகம்,டி.பி.எஸ்.எஸ் ராஜ்குமார் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.