Rock Fort Times
Online News

ஒரு கையில் ஸ்டியரிங், மறு கையில் செல்போன்…- பொறுப்பற்ற முறையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்…!

தொழில் நகரமான கரூருக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில், குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பேருந்து பெட்டவாய்த்தலை அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் எஸ்.சரவணன் என்பவர் ஒரு கையில் பஸ்ஸை இயக்கியபடியும், மறு கையில் செல்போனில் பாட்டு கேட்டபடியும் பேருந்தை இயக்கியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். ஆனால், அவர் மீண்டும் செல்போன் பார்த்தவாறு கரூர் காந்திகிராமம் வரை பேருந்தை இயக்கியுள்ளார். இதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை இயக்குவதால், அச்சத்துடன் பயணிக்கிறோம் என சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது, வைரலானது. இதனைப் பார்த்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தி, கரூர் பணிமனை 1-ஐ சேர்ந்த ஓட்டுநர் சரவணனை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்