Rock Fort Times
Online News

திருச்சியில் சென்டர் மீடியனில் ஆட்டோ மோதி டிரைவர் பலி…

திருச்சி மேலப்புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 59). சம்பவத்தன்று இவர் பாலக்கரை மேலப்புதூர் சுரங்க பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் ரவி பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ரவி இறந்து விட்டதாக கூறினார்.
இந்த விபத்து குறித்து கோட்டை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்