Rock Fort Times
Online News

ஓணம் கொண்டாட்டம் வேண்டாம்! – கேரளா முடிவு!

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.  இந்த இக்கட்டான துயர்மிகு சூழ்நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய கேரள சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.  காணாமல் போனவர்களைத் தேடுதல், உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.  மாநில அளவிலான கொண்டாட்டங்களைத் தவிர, மாவட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திட்டமிடப்பட்ட ஓணம் நிகழ்ச்சிகளும் இந்த ஆண்டு நடைபெறாது.  . மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்