Rock Fort Times
Online News

நாங்கள் யார் தெரியுமா?- போதையில் போலீசாரிடம் ரகளை செய்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து பெரம்பலூர் நோக்கி கார் ஒன்று சேலம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. காரில் 5 பேர் பயணம் செய்தனர். அந்த கார், திருச்சி மாவட்டம் உத்தமர்கோயில் மேம்பாலத்தில் வந்த போது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காரின் பின்புறம் மோதியது. இதுதொடர்பாக காரில் வந்தவர்களுக்கும், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் காரை பாலத்தின் கீழே எடுத்து வாருங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று கூறினர். இதனை ஏற்க மறுத்த அவர்கள் மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். மேலும், நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று கூறி ரகளை யில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி சரக டிஎஸ்பி அஜய்தங்கம் அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது அவரிடமும் ரகளையில் ஈடுபட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். பின்னர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே இருங்களூர் பகுதியில் அவர்களை கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா பெரியபாலம் மலையப்பநகரை சேர்ந்த அலாவுதீன்(53), நவீன்குமார் (23), செந்தில்குமார்(35), குளித்தலை காவேரி நகரை சேர்ந்த சண்முகவேல்(24), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், செட்டியதெருவைச் சேர்ந்த பாண்டியன்(55) என தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்