மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்க வைர விழா: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விழிப்புணர்வு பேரணி…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தேசிய சாரண, சாரணியர் இயக்க 75 -ம் ஆண்டு வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா நடைபெறுகிறது. இதனை, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் திருச்சியில் இன்று(23-01-2025) 2000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தானும் பேரணியில் கலந்து கொண்டார். அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய பேரணி டிவிஎஸ் டோல்கேட் வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.