ஆங்கில புத்தாண்டு (2024) பிறந்ததை ஒட்டி உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டை ஒட்டி சாமி தரிசனம் செய்வதற்காக கோவில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்சி பாலக்கரை சகாய மாதா பேராலயம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லூர்து மாதா பேராலயம், மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம் மற்றும் உள்ள பேராலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இன்று காலையிலும் திருப்பலி நடந்தது. அதேபோல, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில், திருச்சி கோர்ட் அருகே உள்ள ஐயப்பன் கோவில், திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று இரவு முதலே வானவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், நடைபெற்றது. புத்தாண்டு பிறப்பின் போது ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் கேக்குகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.