மின் கட்டண உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் சரி வர வழங்கப்படாததை கண்டித்தும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இந்த விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று(25-07-2024) தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில், மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கழக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ராகவ் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், தொழிற்சங்கம் திருப்பதி ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், காளியப்பன், ப்ரீத்தா விஜய் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் விஜய சுரேஷ், வக்கீல் ஐயப்பன், பெருமாள், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன், சங்கர், அலெக்சாண்டர், மோகன், முகமது ரபி, வெங்கடேசன், அருள்ராஜ், குமார், நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், துவாக்குடி நகரச் செயலாளர் சிங்காரவேலன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் மாரிசன், பரமசிவம், கூத்தைப்பார் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
Comments are closed.