Rock Fort Times
Online News

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – தொல். திருமாவளவன் அறிவிப்பு..

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், ஆற்றலரசு, அன்புகுருசெல்வம், தொழிலாளர் விடுதலை முன்னோர்கள் மாநில துணை செயலாளர் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில நிர்வாகி அரசு, திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் தங்கதுரை, திருச்சி மண்டல செயலாளர் பொன்.முருகேசன், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மாவட்டத் துணைச் செயலாளர் சிந்தை சரவணன், பெல் விஜயபாலு, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி மற்றும் ஒன்றிய, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல். திருமாவளவன் கூறுகையில் :

பெரியார் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு உரிமையானவர் அல்ல ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் உரிமையானவர் என உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தனது காழ்ப்புணர்வை கக்கி கொண்டிருக்கின்றனர். அவரை வீழ்த்துகிற முயற்சிகளில் பெரியாரின் சிந்தனையாளர்களும், அம்பேத்கரின் சிந்தனையாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு இருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண போராளிகள் ஒருங்கிணைத்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்க்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து எதேச்சதிகார போக்கோடு செயல்பட்டு வருகிறது, எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை .அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை . அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்கலை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கூட்டத்தொடரிலும் இந்த அமர்வில் முக்கிய மூன்று குற்றவியல் சட்டத்தையும், சட்டங்களுக்கான மசோதாவையும் நிறைவேற்றி விட வேண்டும் என முடிவு செய்து அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றி அதனை நிறைவேற்றியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகற்றுவார்கள். வருகிற 29ம் தேதி தமிழக முழுவதும் இயந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.

வெல்லும் சனநாயக மாநாடு சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெறும். முதல்வரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம்.பாஜகவை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சிஏஜி மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது. ஆகவே, பாஜகவை சேர்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி ஆனால் பாதிப்புக்கு ஏற்றது போல் புயல் மழை பாதிப்பிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. அதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. 21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு தம்பிடு காசு கூட வழங்கவில்லை. குறிப்பாக நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படித்திருக்கிறார் என தெரிவித்தார்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்