Rock Fort Times
Online News

தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் – டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு…

35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி :

1. அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம்.

2. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

3. திருவள்ளுவா்  மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

4. ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம்.

5. தாம்பரம் சேலையூர் காலல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராக மாற்றம்.

6. தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம்.

7. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாக மாற்றம்.

8. சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு டிஎஸ்பி.

10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

11. திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவின் டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

12. மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி காவல் டிஎஸ்பியாக இருந்த அகஸ்டின் ஜோசுவா லானெச் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

13. தேனி மாவட்ட பெரியகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த கீதா தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.

14. திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையராக இருந்த சுப்பையா திண்டுக்கல் மாவட்ட பழனி காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

15. திருநெல்வேலி நகர குற்ற ஆவண காப்பகப் பிரிவின் காவல் உதவி ஆணையராக இருந்த சரவணன் ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

16. தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

17. முதல்வர் பாதுகாப்பு பிரிவில் (Core cell) டிஎஸ்பியாக இருந்த கந்தவேலு சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையராக மாற்றம்.

18. நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் டிஎஸ்பியாக இருந்த சிவக்குமார் திருப்பூர் மாவட்ட அவினாசி காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

19. கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

20. ராமநாதபுரம் சரக காவல் பயிற்சி பிரிவு டிஎஸ்பி சுரேஷ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி போலீஸ் டிஎஸ்பியாக மாற்றம்.

21. தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாக இருந்த உவ பிரியா (P.Uva Priya) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

22. கடலூர் மாவட்ட பண்ருட்டி டி எஸ் பி யாக இருந்த சபியுல்லா கடலூர் மாவட்ட நெய்வேலி காவல் டிஎஸ்பியாக மாற்றம்.

23. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபு திருநெல்வேலி நகர உளவுப்பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

24. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிக்குமரன் தமிழ்நாடு சீருடை பணியயாளர் தேர்வாணைய பிரிவின் டிஎஸ்பியாக மாற்றம்.

25. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையரக நலப்பிரிவின் உதவி ஆணையராக மாற்றம்.

26. காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு (Core cell) டிஎஸ்பியாக மாற்றம்.

27. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பரசன் தஞ்சாவூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக மாற்றம்.

28. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டிஎஸ்பியாக மாற்றம்.

29. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தையல்நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.

30. தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த ரவி தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.

31. கோவை மாவட்ட பேரூர் டிஸ்பியாக இருந்த ராஜபாண்டியன் தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம்.

32. தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

33. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.

34. காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வசேகர் தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மையத்தின் உதவி ஆணையராக மாற்றம்.

35. சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகீமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்