Rock Fort Times
Online News

த.வெ.க.சார்பில் ‘வெற்றி தொலைக்காட்சி’ விரைவில் தொடக்கம்… * நாஞ்சில் சம்பத் வாழ்த்து!

அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், வெற்றி டிவி என்கிற பெயரில் புதிய தொலைக்காட்சியை தமிழக வெற்றி கழகம் தொடங்க உள்ளது. அரசின் திட்டங்களையும், கட்சி நிகழ்வுகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த டிவி தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய முழுநேர செய்தி மற்றும் அரசியல் விவாதக் காரியங்களுக்கான இந்த ‘வெற்றி தொலைக்காட்சி’ உருவெடுக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெகவின் இந்த புதிய ஊடகப் பயணத்திற்கு, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான நாஞ்சில் சம்பத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்து வரும் முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளையும், தவெகவின் கொள்கை முழக்கங்களையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கப் போகும் ‘வெற்றி தொலைக்காட்சி’க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்; இத்தொலைக்காட்சி மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நடப்பு 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் இத்தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்புச் சேவைகள் (Live Broadcast) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளதாகத் தவெக தரப்பில் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்