திருச்சி உறையூரில் திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சிய நபர் ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி!
திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், மாநகராட்சி குடிநீர் விநியோகம் சரியாக வருவதில்லை என அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் , இன்று அதிகாலை இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு வீட்டில் குடிநீர் குழாயுடன் மின்மோட்டர் இணைத்து குடிநீரை எடுத்தது தெரியவந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிலிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்து மேலும் இதுபோன்று செயலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் இது குறித்து கூறுகையில்., இதுபோன்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல வீடுகளில் சட்டத்தீற்கு புறம்பாக மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது மிகப்பெரிய குற்ற செயலாகும். இதனால் மற்றவர்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்க முடியாத சூழல் ஏற்படும்.ஆகையால் இது போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, மின் மோட்டாரை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.