பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனர் மோகன் ஜி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் …!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் புண்படுத்துவதாக உள்ளது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், திருச்சி வயலூர் சுப்பிரமணியசாமி கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன், மோகன்ஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலும், சமயபுரம் கோவில் மேலாளர் கவியரசு சமயபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று(24-09-2024) சென்னை சென்று இயக்குனர் மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் அவர் சென்னையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 192; 196 (1) (தீ); 352; 353 (1) (தீ); 353(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 3 நீதிபதி பாலாஜி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
Comments are closed.