உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாத் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்8 பேர் காயமடைந்தனர். கௌரிகுண்ட் அருகே கேதார்நாத் யாத்திரை பாதையில் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக ருத்ரபிரயாக்கில் உள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாநில பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். நிலச்சரிவில் காயமடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Comments are closed.