Rock Fort Times
Online News

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி: பதவியை ராஜினாமா செய்தார் அ.ம.மு.க. கவுன்சிலர்…!

பாரதீய ஜனதா கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேனி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேனி தொகுதியில் கட்சியின் தலைவர் டிடிவி தினகரனும், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர். செந்தில்நாதன் திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அமமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் முறைப்படி தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலையில் மேயர் அன்பழகனிடம் கொடுத்தார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்