Rock Fort Times
Online News

பழனி கோயில் நில மோசடி வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி…!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அறக்கட்டளை நிறுவனர் முருகதாஸ், நிலம் வாங்கிய திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர்
அன்வர்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் முதல் கட்டமாக கைது செய்தனர். பின்னர், கடந்த 6ம் தேதி கொடைக்கானலில் வைத்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசடிக்கு மூல காரணமாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் கடந்த 7 ம் தேதி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இதனிடையே, கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிபதி நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு ஜஸ்டின் மணிகண்டனை வருகின்ற 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் இடைத்தரகர்
ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த 10ம் தேதி தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாஜிஸ்திரேட் முதலாவது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று(12-08-2026) விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி பாக்கியராஜ், அவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்