திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்…!
2 அமைச்சர்கள் பங்கேற்பு...
திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று ( 08.08.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஐபிஎஸ், மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் , துணை கமிஷனா் செல்வகுமாா், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், தேசிய நெடுஞ்சாலை அதிகார திட்ட குழும மண்டல அலுவலர் அஜய் பிஸ்னாய், திட்ட இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன..


Comments are closed, but trackbacks and pingbacks are open.