Rock Fort Times
Online News

திருச்சியில் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை…

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு...

திருச்சி தென்னூர் அண்ணா நகர் 1வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விஸ்வநாதன் (வயது 52). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மன வளர்ச்சி குன்றிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. விஸ்வநாதனுக்கு சமீப காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் தவித்து வந்த அவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்