Rock Fort Times
Online News

திருச்சியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

தண்டவாளத்தில் லாரி டயரை வைத்தது யார்?  

திருச்சி லால்குடி அருகே உள்ள மேலவாலாடி பகுதியில் நேற்று ( 01.06.2023 ) இரவு ரயில்வே தண்டவாளத்தில் பெரிய டயர் ஒன்றை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் அந்த டயர் மீது மோதியது. இதனால் அந்த டயர் துாக்கி வீசப்பட்டது. இதில் ரயிலின் என்ஜினில் கீழ் ரயில் பெட்டிகளுக்கு செல்லும் சில மின் வயர்கள் அறுந்தன. இதனால், ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். உடனே ரயிலை நிறுத்திய அதிகாரிகள், அறுந்த மின் வயர்களை சரி செய்தனர். இதையடுத்து 20 நிமிடம் தாமதமாக அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த டயரை மீட்டனர். தண்டவாளத்தில் டயரை வைத்த மர்ம நபர்கள் யார்?, ரயிலை கவிழ்க்க சதி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இந்த வழியாகத்தான் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் தண்டவாளத்தின் குறுக்கே டயர் வைக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்