Rock Fort Times
Online News

திருச்சி வாளாடியில் கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கவிழ்க்க சதியா? என 3 சிறுவர்களிடம் விசாரணை…

வண்டி எண் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிக்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது யாரோ விஷமிகள் சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே டயர்களை நின்ற நிலையிலும் படுக்கை வசத்திலும் போட்டுள்ளனர். இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார். ஆயினும் படுக்கை வசத்தில் நிறுத்தப்பட்டிருந்த டயர் ரயில் இன்ஜின் தட்டி தண்டவாளங்களுக்கு வெளியே வீசப்பட்டது. படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால்,என்ஜின் மின் ஒயர் கேபிள்கள் துண்டானதால் நான்கு கோச்சுகளில் ஃபேன், லைட்கள் இயங்கவில்லை. இதுகுறித்து பைலட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார். விஷமிகள் சிலரின் செயலால் பெரும் ஆபத்து எழக்கூடிய சூழலில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை நடத்தினார். மேலும் இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 2 தனிப்படைகளும், ரயில்வே போலீசார் சார்பில் 2 தனிப்படைகளும், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 படை என மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சுரங்கப் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது முன்னாள் தலைவர் மகன் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் என மூன்று பேரிடம் சந்தேகத்தில் அடிப்படையில் தனிப்படையினர் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
ஆயினும் இந்த சதி செயலில் அவர்களுக்கு தொடர்பில்லை என தனிப்படையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்